திங்கள், 9 நவம்பர், 2015

நீர் பேசுகிறது கட்டுரை.....

முன்னுரை:
வணக்கம் "  நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு"..
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது...
 
நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் ..இந்த கட்டுரையும் அப்படித்தான் நீரின் அவசியம் நீரின் முக்கியத்துவம் அகியவற்றை  பற்றி நீர் பேசுவது போல் எழுதப்படுகிறது.. உதவியவர் அப்பா.  எழுத்து முகில் கார்த்திகா...
 
 
விளக்க உரை :
ஒரு அழகான மாலைபொழுது இடி இடிச்சு மழை பொழிஞ்சி  பளிங்கு போல் தண்ணீர் சள சளவென்று ஓடிகொண்டிருந்தது.பெண் ஒருத்தி அதை ரசித்து பார்த்து கொண்டிருந்தால்.. பெண்ணே என்னை ரசிக்கும் உனக்கு  என்   கதையை சொல்கிறேன் கேள்!” என்றது.. தண்ணிர் பேச துவக்கியது ..
 
எனது பிறப்பு :
கடலில் இருந்து நான் கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று வளிமண்டலம் கடந்து மேகமாக மறுக்கிறேன் .சின்ன சின்ன துகள்களாக பிரிந்து கிடக்கும் மேகங்களை காற்று உந்துவதனால் திரள் கார்முகில் மேகங்கள்
உருவாகின்றன.மேகங்களில் இருந்து நான் துளிகளாக, திவலைகளாக மறுக்கிறேன் .நீர் துளிகள்   எப்போது மேகத்தில் அதிகரித்து அதன் உச்சநிலையை தொடுகின்றதோ அப்போது நான் காற்றின் மின்னோட்டத்தின் உதவியால் மழையாக பொழிய துவங்குகிறேன் ..மழை நீராக பூமியை வந்து சேர்ந்த எனக்கு எந்தனை பெயர்கள் உனக்கு சொல்லவா ...
 
எனது பெயர்கள் :
 
காடு அதிகம் இருக்கும் மலை உச்சியில் விழுந்து சொட்டுச் சொட்டாக இணைந்து சிறு "நீரூற்றாக" மறுக்கிறேன்.சிறு நீரூற்றுகள் இணைந்து "அருவியாக" மறுக்கிறேன். மலை உச்சில் இருந்து விழும்போது   "நீர்வீழ்ச்சியாக" மறுக்கிறேன்.. வளைந்து ஓடும் பொது நான் "நதியாக" மறுக்கிறேன்.. நதியாக ஓடும் என்னை அணைகள் கட்டி அடைத்து வைக்கும் பொது "அணைக்கட்டாக"  மறுக்கிறேன்..இன்னும்  எனக்குப் பல பெயர்கள் உண்டு.குளம், குட்டை ,ஏறி ,கண்மாய் என்பது எனது  பெயர்கள்.இத்தனை பெயர்களை கொண்ட நான் உங்களுக்கு எப்படி பயன் அளிக்கிறேன் என்று சொல்லவா..
 
 
எனது பயன்கள்:
 
மக்களின் வயிற்றுப் பசி யைத் தீர்க்கும் விவசாயத் துறைக்கு நான்(மழை) பெரும் சேவையாற்றுகிறேன். ஒரு நாட்டின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் நான் (மழை) பெரும் பங்காற்றுகிறேன். விவசாயத் துறையின் வளர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி புரிகிறது.  மழைநீரின் (எனது) துணையுடன் செழிக்கும் பயிர்கள் மக்களுக்கு உணவாகி அவர்களை வாழவைகிறேன். இதே பயிர்கள் விவசாயிகளுக்கு வருமானத்தை ஈட்டித் தந்து அவர்களின் வயிற்றுப்பசியைப் போக்குகின்றன. உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் நாட்டுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கின்றது. பல இடங்களில் மழை (நான்)பெய்யாததால் அங்குள்ள மக்கள் பசிக்கொடுமையில் மடிகின்றனர். மழை (நான்) ஒரு நாட்டின் வளத்தை நிர்ணயிக்கிறேன்.
 
நான்  மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிராணிகள், தாவரங்கள் உயிர் வாழவும் அடிப்படையாக இருக்கிறேன்.நான் மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று.மின்சார உற்பத்திக்கும்,இன்னும் பல பொருள்கள் தயார் செயும் தொழில்சாலைகள். உலகில் அனைத்து இடங்களிலும் நான் தேவைபடுகிறேன்.
 
 
இது மட்டும் இல்லை உலகில் இருக்கும் அனைத்து வளங்களும் என்னால் முடிவு செய்யப்படுகிறது. நான் இல்லாமல்  எந்த உயிரினமும் இப்பூமியில் வாழ்வது என்பது இயலாத காரியம்.
 
 
ஏய் பெண்ணே இத்தனையும் நான் செய்கிறேன். உலகில் இருக்கும் அனைத்து வளங்களை நான் முடிவு செய்கிறேன் அனால் என் வளத்தை யார் முடிவு செய்வது என்று உனக்கு சொல்லவா.
 
 
நீர் வளம்:
 
என் வளத்திற்கு மரங்களே முக்கிய கரணம்.. ஓங்கி வளர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள் எனது பிறப்பிடம் அங்கு இருந்துதான் நான் உங்களுக்கு அருவியாக ,நதியாக கிடைகிறேன்... மரங்கள் என் வளத்திற்கு  மட்டும் இல்லை உங்களுக்கும் உதவுகிறது.. நிங்கள்    சுவாசிக்கத்  தேவைப்படும் பிராண வாயு ( oxygen. o2) மரங்களில் இருந்தே கிடைக்கிறது. .என் வளத்தை பெருக்கவும். உங்கள் வாழ்வை நலமா அமைக்கவும் மரங்கள் வளர்க்கவேண்டும்..
 
ஆனால் இப்போது உங்களை நினைத்தாள் எனக்கு பயமாகவும் கவலையாவும்  இருக்கிறது...
 
எனது பயத்திற்கும் கவலைக்கும் கரணம் சொல்கிறேன் கேள்.. 
 
 
நீர் மாசுபடுதல்:  
 
தொழில்சாலை கழிவுகள், மருத்துவமனை கழிவுகள். பிளாஸ்டிக்  கழிவுகள் , நிங்கள் பயன் படுத்தும்  நச்சுப்பொருள்கள் இவை  அனைத்தும் என்னை  தூய்மை கெடுக்கப்பட்டு எனது தரம் குறைகிறது...
 
 
இது போன்ற கழிவுகளால் நீர் ஆதாரங்களான ஆறுகள் மற்றும் கடல்களில் தூய்மை கெடு ஏற்படுகிறது...
 
 
மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நீர்மூலம் பரவும் நோய்கள்:
டைபாய்டு
 அமிபியாசிஸ்
 ஜியார்டியாசிஸ்
 அஸ்காரியாசிஸ்
 கொக்கி புழுக்கள்.
 
 
மாசுபட்ட கடல் நீரால் ஏற்படும் நோய்கள்:
தோல் நோய்கள், காதுவலி.
கண்கள் சிவந்து போகுதல்.
மூச்சு திணறல் நோய்கள்.
மூளைக்காய்ச்சல், வாந்திபேதி.
வாந்தி மற்றும் வயிற்றுவலி.
 
 
 
மாசுபட்ட நீரில் வளரும் மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால் பாதிப்பு ஏற்படும்.
மாசுபட்ட நீரில் வளர்ந்த காய்கறிகளை உட்கொண்டாலோ, கைகளை அலம்பினாலோ பாதிப்பு ஏற்படும்.
 
நீர் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
உரம் மாசுபாடு (நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை) அதிக உரங்களினால் பாசிகள் தேவைக்கதிகமாக வளர்ந்து உயிரினங்கள் உண்ணும்பொழுது இறக்க நேரிடும்.
 
மழையாக நான் மண்ணில் விழும் பொது மிகவும் தூய்மையாக இருக்கிறேன் நிங்கள் சுற்று சுழலை மாசு படுத்துவதால் நானும் மாசு அடைகிறேன் ...
 
மக்கள் தொகை பெருக்கத்தால் எனது (நீரின்) தேவை நாளுக்குநாள் பெருகிக்கொண்டே செல்வதால் , நிலத்தடி நீரினை பெருமளவில் நிங்கள் உறிஞ்சி எடுத்து வருவதால் கடல்நீர் உட்புகுந்து நல்ல
நீரை உபயோகிக்க இயலாதவண்ணம் செய்யும் அபாயம் தொடர்கிறது .. எனவே வருங்காலத்தில் குடிக்க நீரின்றி
மக்கள் தவித்து மாளும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.!
 
 
இவைகள் எல்லாம் நடக்காமல் இருக்கவேண்டும் என்றால் அது உங்கள் கைகளில் தான் இருக்கிறது ... என்னை மாசு படுத்தாமல் பயன் படுத்துங்கள் .. என்னை வளமாக பெறுவதற்கு வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும். மண்ணை வளப்படுத்த நிங்கள் மரங்கள் நடுங்கள். உங்களை வளப்படுத்த நான் மீண்டும் மழையாக வருகிறேன்.  என்று சொல்லி தண்ணிர்  ஓட்டத்தை தொடர்ந்தது.


முடிவுரை:

"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்"
என்னும் பெருந்தகையின் வாக்கினை நினைவில் கொண்டு
நாம் இனி வரும் காலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சியில் இறங்காவிடில் நம் எதிர்காலம் கேள்விக்குறியாய் மாறும் என்பதில்
சிறிதளவும் சந்தேகமில்லை .. தற்போது அரசாங்கமும் தண்ணீர் பஞ்சத்தை போக்கிட மழை நீர் சேமிப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது.. இதுவரை பெய்த மழைநீரை சரியாக சேமிக்காமல் கடல் நீரில் கலந்திட செய்து வீணாக்கிய காரணத்தால் ஏற்பட்ட இந்த அவல நிலையை இனி மழைநீர் சேமிப்பு முறைகளை பின்பற்றி நிலத்தடி நீரின் வளத்தை பெருக்குவதன் மூலம் நாம் சரி செய்ய
முடியும். "வான் நோக்கி வாழும் உலகு" என்றானே
வள்ளுவன் அதன் உண்மை நிலை உணர்ந்து வான் தரும் கொடையாம் மழையை , மழைநீரை சிறப்பாக தேக்கி , பாதுகாத்து வாழ்வோமேயானால் நீரின்றி கண்ணீரோடு வாழும் நிலை மாறிவிடும்
என்பது திண்ணம்!

"இருபுனலும் வாய்ந்த மழையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு "
என்ற வள்ளுவன் இருபுனல் எனும் வாக்கில் மேல்நீர் எனப்படும் மழையும் கீழ்நீர் எனப்படும் நிலத்தடி நீரையும் குறித்துள்ளமை நோக்கி நிலத்தடி நீர்வளம் பெருக்கி மழைநீர் சேமிப்பு முறைகளை கடைப்பிடித்து செயலாற்றி நாட்டில் உயர்வோம்!..நலமான வளமான எதிர்காலம் காண்போம்.